×

சித்தூர் அருகே அதிசயம் மனித உடலுடன் பிறந்த ஆட்டுக்குட்டி: ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

திருமலை: மனித உடலுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்தது. ஆந்திராவின் புங்கனூரில் உள்ள பி.டிகாலனியைச் சேர்ந்தவர் அயூப். இவர் வளர்ந்து வரும் ஆடுகளில் ஒன்று நேற்று காலை ஒரு குட்டியை ஈன்றது. இந்த குட்டி மனித உடலுடனும், ஆட்டு தலையுடனும் காணப்பட்டது. இந்த அதிசய ஆட்டுக்குட்டி குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து ஆட்டு குட்டியை பார்த்துச்சென்றனர். ஆனால் பிறந்த சில மணி நேரத்தில் ஆடும், விநோத ஆட்டிக்குட்டியும் இறந்து விட்டன. தகவல் அறிந்த கால்டை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ஆட்டுக்குட்டியை பார்வையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மரபணு கோளாறு காரணமாகவே மனித உடல் அமைப்புடன் கூடிய விநோத ஆட்டுக்குட்டி ஈன்றுள்ளதாக தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : birthday ,Chittor , Chitur, human body, lamb
× RELATED உத்திரமேரூர் அருகே கலைஞர் பிறந்தநாள்...