×

10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு...மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக 10% இடஒதுக்கீடு உள்ளதாக திமுக தனது வாதத்தை வைத்துள்ளது. மேலும் பொருளாதாரம் என்பது அடிப்படையில் மாறக்கூடியது என்றும், சமூகரீதியில் தான் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார் எனவும் திமுக வாதிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதாவை தேற்கடிக்கமுடியாததால் அரசியல்ரீதியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்துள்ளது. அதனையடுத்து 10% இட ஒதுக்கீடு யாருக்காக வழங்கப்படுகிறது? என உயர்நீதிமன்றம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கெனவே எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், புதிதாக இட ஒதுக்கீடு யாருக்காக? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK , DMK ,continues, challenge ,10% reservation
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி