×

60 ஆண்டாக நடத்திய தொண்டு நிறுவனத்துக்கு கல்தா தேசிய விருது பெறும் குழந்தைகளை இந்தாண்டு அரசே தேர்வு செய்தது: பல கோடி முறைகேடு அம்பலத்தால் அதிரடி

புதுடெல்லி: குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய அளவில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் விருதுகளின் தேர்வு நடைமுறைகளை இந்தாண்டு மத்திய அரசே நடத்தியது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசியளவில் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். கடந்த 1957ம் ஆண்டு முதல் இந்த விருதுகளுக்கான தேர்வை, ‘இந்திய குழந்தைகள் நல  கவுன்சில்’ (ஐசிசிடபிள்யு) என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வந்தது. இந்த தொண்டு நிறுவனம் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், வீரதீர விருதுகள் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து  நிதியுதவி பெற்று வந்தது.

இந்நிறுவனத்தின் வரவு செலவு கணக்கை தணிக்கை செய்தபோது, கடந்த சில ஆண்டுகளாக செலவு செய்யாத பணம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் மத்திய அரசிடம் திருப்பி  அளிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. இந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்நிலையில், இந்தாண்டுக்கான குழந்தைகள் விருதை, ‘பிரதம மந்திரி ராஷ்டிரிய  பால் புரஷ்கார்’ என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்தது. இதற்கான தேர்வு முறையை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தலைமையிலான தேசிய தேர்வு  குழு கடந்த வாரம் நடத்தி விருதுகளுக்காக 26 குழந்தைகளை தேர்வு செய்தது. இந்த குழந்தைகள் குடியரசு தினவிழா அணி வகுப்பில் கலந்து கொள்வர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  பரிசளிப்பார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : charity organization ,children ,scandal , 60-year-old charity,selected,children , Kalta National Award ,a multi-crore scandal
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...