×

ரிசர்வ் வங்கி உட்பட பல அமைப்புகளின் மரியாதையை மோடி அரசு அழித்துவிட்டது: மம்தா பானர்ஜி சாடல்

கொல்கத்தா: மோடி ஆட்சி முடிவுக்கு வரும் காலம் நெருங்கி விட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது: மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உதாரணம்தான் கொல்கத்தா பொதுக்கூட்டம். தம்மைத்தவிர மற்றவர்கள் யாருக்கும் நேர்மை இல்லை என்று மோடி பேசிவருவது வேடிக்கையாக உள்ளது. 5 ஆண்டுகளில் நாட்டையே பாஜக கொள்ளையடித்து விட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.

மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சிதைந்து விட்டது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. எங்கள் கூட்டணியில் எல்லோருமே தலைவர்கள்தான். மக்களவைத்தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். ரிசர்வ் வங்கி உட்பட பல அமைப்புகளின் மரியாதையை மோடி அரசு அழித்துவிட்டது. மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. நாட்டின் தேவையைக்கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. டெல்லி, உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Modi ,institutions ,Reserve Bank of India ,Mamata Banerjee Sadal , Mamata Banerjee, Reserve Bank, Modi, BJP Government,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி