×

காற்று மாசால் கொலைக் கூடமான டெல்லியிலிருந்து மக்கள் வெளியேறி விடுவது நல்லது : உச்சநீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: ‘காற்று மாசு காரணமாக டெல்லி நகரமே கொலைக் கூடமாக மாறி விட்டதால், மக்கள் இங்கிருப்பதை விட வெளியே சென்று விடுவது நல்லது’ என்று உச்ச நீதிமன்றம் வேதனையுடன் கூறியுள்ளது.டெல்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசு உச்சக்கட்டத்தில் உள்ளது. கடுமையான பனிப்பொழிவு, மாசு அதிகரிப்பு காரணமாக காற்றின் அடர்த்தி அதிகமாகி, கடந்த 2 மாதங்களாக பகல் நேரத்திலும் டெல்லி பெரும்பாலான நேரங்களில் இரவாக காட்சி அளிக்கிறது. சுகாதார சீர்கேடு காரணமாக, மக்கள்வெளியே வரவே பயந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். .

இந்நிலையில், காற்று மாசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அபரஜிதா சிங், ‘‘கடுமையான காற்று மாசு காரணமாக, டெல்லி நகரமே கொலைக் கூடமாக மாறி விட்டது’’ என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், ‘‘நீங்கள் சொல்வது உண்மைதான். வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக டெல்லியில் காற்று மாசு அதிகமாகி விட்டது. இதனால், டெல்லி நகரமே கொலைக் கூடமாக மாறி உள்ளது. இந்த நச்சுத்தன்மையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ, அதை அரசு சார்ந்த எந்த அமைப்பும் உருப்படியாக செயல்படுத்தவில்லை. கடுமையான மாசு ஏற்படுத்தக் கூடிய வாகனங்கள், இரவு நேரங்களில் ெபருமளவில் டெல்லிக்குள் நுழைகின்றன. இதற்கு யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த கொடுமையை அனுபவிப்பதற்கு பதிலாக, டெல்லி மக்கள் இங்கிருந்து வெளியே சென்று நிம்மதியாக இருக்கலாம்’’ என்று கருத்து தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : air mass killer ,Supreme Court ,Delhi , Air pollution and the Supreme Court
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு