×

திருப்புத்தூர் அருகே மாறாமல் தொடருது பழமை : மாட்டு வண்டியில் மணமக்கள் பயணம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருமணம் முடித்த மணமக்கள் பழமை மாறாமல் மாட்டு வண்டியில் பயணித்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் - தவமணி தம்பதி மகன் சரவணக்குமார். இவருக்கும், ஜமீன்தார்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் - சாந்தி தம்பதி மகள் யோகப்பிரியாவிற்கும் நேற்று திருத்தளிநாதர் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. இருவரும் இன்ஜினியர்கள். திருமணம் முடிந்தபின் மணமக்கள் இருவரும் பழமை மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். தங்களது முன்னோர்கள் திருமணம் முடிந்து மாட்டு வண்டியில் பயணம் செய்ததை நினைவு கூறும் வகையிலும், சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையிலும் தனது சொந்தக் கிராமமான 5 கி.மீ. தொலைவில் உள்ள மாங்குடிக்கு உறவினர்களுடன் 3 வண்டிகளில் பயணம் செய்தனர். மணமக்களின் மாட்டு வண்டி பயணத்திற்கு கிராமத்தில் பொதுமக்களால் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அருகில் உள்ள கிராம மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bride ,trip ,Thiruppattur , Creep, cow carriage, bridesmaid travel
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...