×

அவசரமாக சென்றதால் ஹெல்மெட் அணியவில்லை - இனி, இதுபோல் நடக்காது என அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவாதம்

மதுரை: டெங்கு பாதிப்பு பகுதிக்கு அவசரமாக சென்றதால் ஹெல்மெட் அணிய முடியவில்லை. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக ஐகோர்ட் கிளையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது.சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கிராமத்தில் நவ.10ல் சுகாதார நல்வாழ்வு முகாம் நடந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமானோர் டூவீலர்களில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினர்.

ஐகோர்ட் உத்தரவை மீறி நடந்த அமைச்சர் உள்ளிட்டோர் மீது இலுப்பூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் தரப்பில், டெங்கு பாதிப்பு பகுதிக்கு அவசரமாக சென்றதால் ஹெல்மெட் அணிய முடியவில்லை. இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து ெகாண்ட நீதிபதிகள், இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் ேதவையில்லை எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wijabaskar , Minister Vijayapaskar, Helmet, Guarantee
× RELATED தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி