×

கோடநாடு கொலை வழக்கில் சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவை உதகை நீதிமன்றம் ஏற்றது. 2 பேரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு போலீசின் மனுவை உதகை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. போலீஸ் மனு சனி அல்லது திங்கள் அன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாமீனுக்கு எதிர்ப்பு ஏன்?

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் இருவரும் ஜாமினில் உள்ளனர். ஜாமினில் உள்ளவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். முதல்வர் மீது பழி போட்டதால் ஜாமினை ரத்து செய்யக்கோரி போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

வழக்கு விவரம்:

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில்,  காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயான், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சயானை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.

இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த மனு மீதான விசாரணை சனி அல்லது திங்கள் அன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,cancellation ,Satyan ,Manoj , Kodanad, murder, robbery
× RELATED கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!