காவலரை வெட்டிய வழக்கில் ரவுடி ‘சைக்கோ’ விமல் கைது

சென்னை: காவலரை வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்று பின்னர் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி சைக்கோ விமலை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்தவர் சைக்கோ விமல். ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் சரித்திர பதிவு ரவுடியான இவர் மீது, ராயப்பேட்டை, மயிலாப்பூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், அடிதடி  உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2013ம் ஆண்டு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் தியாகராஜனை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளி. சிறையில் இருந்து நிபந்தனை  ஜாமீனில் வெளியே வந்த சைக்கோ விமல், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், ேநற்று முன்தினம் இரவு குடிபோதையில் வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டிருந்த சைக்கோ விமலை ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் ெசய்யப்பட்டது.* கிண்டி நரசிம்மபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (24). இவர், வீட்டில் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து பீரோவில் இருந்த விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் செல்போனை திருடிய துரைப்பாக்கம் எழில் நகரை  சேர்ந்த ராஜா (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் கிண்டியை சேர்ந்த சேட்டு தலைமறைவாகி விட்டார்.

* திருவள்ளுவர் தினத்தன்று, திருவல்லிக்கேணி எஸ்எம் நகர் 5வது தெருவில் கள்ளத்தனமாக மது விற்ற திருவல்லிக்கேணி பல்லவன் சாலையை சேர்ந்த சேகர் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். 34 பீர்பாட்டில்கள்  உட்பட 192 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், வில்லிவாக்கம், ராஜமங்கலம் 8வது தெருவில் மதுவிற்ற சரளா (59), பெருங்குடி ரயில் நிலையம் அருகே மதுவிற்ற தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்த மணிமாறன் (38), சேகர் (31) ஆகியோர் கைது  செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் மற்றும் ₹5,980 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.அடையாறு கஸ்தூரிபா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சங்கர்  (38). நேற்று முன்தினம் மாலை குடும்பத்தோடு சினிமாவுக்கு சென்றுள்ளார். இரவு 9 மணிக்கு, இவரது வீட்டின் வாட்ச்மேன் ராஜு வீட்டினுள் உடைப்பது போன்ற  சத்தம் வருவதாக போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, முதல் மாடியில் பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள் மற்றும் 40,000 ரொக்க  பணம் திருடு போயிருப்பது தெரிந்தது.

வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (52). இவர், நேற்று முன்தினம் குடும்பத்தோடு வெளியூர்  சென்றார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பக்கத்து  வீட்டுக்காரர் கொடுத்த தகவலின் பேரில் அவர் வீடு திரும்பினார். அப்போது, 10 சவரன் நகை மற்றும் 30,000 ரொக்கம் திருடு போயிருந்தது.  பல்லாவரம் பேருந்து நிலையம் அடுத்து, கன்டோன்மென்ட் கார் பார்க்கிங் வளாகத்தில் கோயில் உள்ளது. இங்கு, நேற்று டிப்டாப் உடை அணிந்து வந்த இளைஞர், சாமி கும்பிடுவது போல் நடித்து, அம்மன் கழுத்தில் கிடந்த தாலி  செயினை பறித்துக் கொண்டு ஓடினார். அப்பகுதி பொதுமக்கள் கொள்ளையனை மடக்கி தர்ம அடி கொடுத்து பல்லாவரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்தபோது, ஊரப்பாக்கம், ஆஸ்டல் தெருவை சேர்ந்த கண்ணன் (34) என்பதும், குடும்பம் நடத்த போதிய வருமானம் கிடைக்காததால், திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More