×

பழநி மலைக்கோயிலில் 21ல் தைப்பூச தேரோட்டம்

பழநி:  திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர்.  நடப்பாண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு, பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.  10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி  நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 20ம் தேதி இரவு 7.45 மணிக்கு நடக்க உள்ளது. தைப்பூச தேரோட்டம் 21ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. 24ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம்  நடைபெறும். இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது. 10 நாட்களும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palani hills , Palani , Thaipuzha, thermal
× RELATED கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் 60 அடி...