×

பணந்தின்னி கழுகுகள் பாரம்பரியத்தை பேசலாமா? கவிஞர் காசிமுத்துமாணிக்கம் கேள்வி

சென்னை: பணந்தின்னி கழுகுகள் பாரம்பரியத்தைப் பற்றி பேசலாமா என்று திமுக வர்த்தகர் அணி தலைவர் காசிமுத்து மாணிக்கம் டிடிவி.தினகரனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பிச்சிவாக்கம் ஊராட்சி சபை கூட்டத்தில் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது:ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வென்றால் 89 என்பது 90 ஆகும். தினகரன் வென்றால் ஸ்லீப்பர் செல் எல்லாம் வெளிவந்து, அ.தி.மு.க. ஆட்சியே கவிழும் என்பதனால்தான் தி.மு.க.வை தவிர, தி.மு.க.வின் ஆதரவு வாக்குகளும் தினகரனுக்கு விழுந்தது. 20 ரூபாய் பொய்யாய் போனதுபோல, ஸ்லீப்பர் செல்லும் பொய்யானது. அதே நேரம், ஆர்.கே. நகரில் இன்று தினகரன் நின்றால் காப்புத் தொகை கண்டிப்பாக போகும்.

 தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முனைந்து கையும் களவுமாக அகப்பட்டு, லஞ்சம் கொடுக்க ஊடுகருவியாக பயன்பட்ட சுரேஷ் சந்திராவோடு, தொடர்ந்து தொலைபேசிகளில் நடத்திய உரையாடல் பதிவுகள் உள்பட 58 பேர் திகார்காரருக்கு எதிராக சாட்சியம் அளித்தார்கள். இது தொடர்பாக குரல் சோதனைக்கு பலமுறை அழைத்தும் இன்றுவரை நேரில் போகாமல் சாக்குப் போக்குக் கூறி தவிர்த்து வரும் மாபியா தலைவன், பல ஆண்டுகள் பலமுறை சிறையில் இருந்ததை தியாக சிறை வாழ்க்கை என்பதுபோல பேசுவது கேலிக்குரியது. நீயோ இந்த நிமிஷத்தில் கூட ஒரு பிணைக் கைதி. நாளையோ, அடுத்த மாதமோ விரைவில் சிறைக்கம்பிகளை எண்ணப்போவது உறுதி. சித்தி சசிகலா, அத்தை இளவரசி, தம்பி சுதாகரன், பெங்களூர் சிறையில் இருக்கும் கைதிகள்.

உன் தங்கை, தங்கை கணவர் ‘பெரா’ வழக்கில் பிணையிலிருக்கும் தியாகிகள். உழைத்துப் பிழைத்த சகோதரர்களிடமிருந்து பத்து சினிமா மால்களை அடிமாட்டு விலைக்கு அச்சுறுத்தி பிடுங்கிக்கொண்ட பணந்தின்னி பேய்கள் பாரம்பரியத்தை பற்றி பேசலாமா?

  ஜெயலலிதாவை சிகிச்சைக்காக அயல்நாடு கொண்டு செல்ல ஆயத்தம் செய்யலாம் என நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகிறாரே என்ன பதில். மருத்துவமனையிலோ மரணத்துக்கு பின்போ ஜெயலலிதாவிடம் ஜெயலலிதாவின் உண்மையான உறவான அமிர்தா, தீபா, மாதவன் நெருங்க முடியாமல் செய்தது ஏன். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உன் கட்சி எம்.பி.க்கள் அரக்கோணம் அரி, திருச்சி குமார், கடலூர் அருண்மொழிதேவன், சிதம்பரம் சந்திரகாசி அறிக்கை வெளியிட்டு உள்ளார்களே பதில் சொல். அமைச்சர்கள்கூட நுழைய முடியாத மருத்துவ அறை பில்லில் 1.17 கோடிக்கு சாப்பிட மனம் எப்படி வந்தது? அம்மா 2 இட்லிதான் சாப்பிட்டார்.  மீதி தொகைக்கு உங்கள் குடும்பம் அப்படி என்ன சாப்பிட்டீர்கள்?

  உன்னோடு வந்து பதவியை இழந்து நிற்கிறார்களே 18 பேர்.  அதற்கு மேல்முறையீடும் இல்லாமல் 18 தொகுதிக்கு தேர்தல் இல்லாமல் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் வேண்டும் என்கிறாயே. தேர்தல் பயம் உனக்கா, எங்களுக்கா? படிக்காத முட்டாள்தான் பரீட்சை ஆரம்பித்ததும் விடைத்தாளை அரைகுறையுமாக நிரப்பிக்கொடுத்துவிட்டு அறையைவிட்டு ஓடி விடுவான். படித்தவன்தான் கேள்வித்தாள் மாறிவந்துவிட்டால், உரிய கேள்வித்தாளை தாருங்கள், அல்லது வேறு ஒரு நாள் பரீட்சை வையுங்கள் என்பான். அப்படி உரிய பாடத்துக்கான கேள்வித்தாளை மாற்றித் தாருங்கள்.  அல்லது தேர்வைத் தள்ளி வையுங்கள் என்று ஒரு மாணவன் கேட்பதினாலேயே அவன் பரீட்சைக்குத் தயாராகவில்லை என்று பொருள் அல்ல. தகுதி இருப்பதனால்தான் தள்ளிவைக்கச் சொல்கிறான். இவ்வாறு காசிமுத்து மாணிக்கம் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kasimudu Manikinam , Eagles, kasimuttu gemikkum, dtv.dinakaran
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...