×

தமிழர் திருநாள் உற்சாக கொண்டாட்டம் .... தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

சென்னை: அகிலமெங்கும் உள்ள தினகரன் இணையதள வாசகர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை உங்கள் அபிமான தினகரன் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் பொங்கும் மங்களம் எங்கும் தங்கிடவும் வாழ்த்துகிறோம். இத்திருநாள் சிறந்திட மாதம் பிறக்கும் நேரப்படி பொங்கல் பானை வைப்பது சிறந்த முறையாகும். பொங்கலின் சிறப்பம்சம் கரும்பும், மஞ்சள் கொத்தும் ஆகும். பொங்கல் திருநாளையொட்டி தமிழமெங்கும் கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் காய்கறிகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

பொங்கல் திருநாளான இன்று பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை வீடுகளில் தயார் செய்யப்பட்டு பின் கரும்புடன் சேர்த்து சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படும். பொங்கல் திருநாளில் குறிப்பாக சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படுவதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளி பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோலமிடட்டு அதற்கு அருகில் நிவேதனப் பொருட்களை வைத்து சூரியனுக்கு பூஜையும், நிவேதனமும் செய்வது தமிழரின் மரபாகும்.

இயற்கைக்கு நன்றி செலுத்தும் உயர்வான விழாவான உழவர் திருநாளை தை முதல் நாளில் கொண்டாடுவது தமிழர்களின் மரபு ஆகும். அப்படிப்பட்ட பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று தரணி எங்கும் தமிழக மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் முன் வண்ண கோலங்கள் தீட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகள் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலை முதலே பொங்கல் வைத்து சூரியனை வழிபட தொடங்கியுள்ளனர்.

தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சூரியனை வழிபட்ட பின்பு பொங்கல், கரும்பு உள்ளிட்டவைகளை அனைவருக்கும் வழங்கி பெண்கள் மகிழ்ந்தனர். உழவருக்கு உற்றதுணையாக இருக்கும் மாடுகளை போற்றும் வகையில் நாளை மாட்டுப் பொங்கலும், நாளை மறுநாள் காணும் பொங்கலும் கொண்டாப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cuddalore Celebration Celebration ,Dinakaran , Tamil , Celebration , Dinakaran .Happy Pongal
× RELATED தமிழகத்தில் 234 தொகுதிகளில் வாக்கு...