×

விவசாயிகள் கடன் தள்ளுபடிக்காக கர்நாடக அரசு பட்ஜெட்டில் ₹46,000 கோடி ஒதுக்கப்படும்: குமாரசாமி தகவல்

பெங்களூரு: ‘‘கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளில்  விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி  செய்ய, பட்ஜெட்டில் ₹46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என கர்நாடகா முதல்வர் குமாரசாமி  கூறினார்.இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று அவர் அளித்த பேட்டி: கூட்டுறவு  வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்  கடன் படிப்படியாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஒரே கட்டமாக கடனை தள்ளுபடி  செய்யும் வகையில், ஒட்டு மொத்த  பயிர் கடனுக்கான தொகை ₹46 ஆயிரம்  ேகாடிக்கான நிதி, பிப்ரவரி 8ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில்  ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

விவசாயிகளை மஜத-காங்கிரஸ் கூட்டணி ஏமாற்றுவதாக பாஜ.வினர்  விமர்சனம் செய்து வருகின்றனர். விவசாயிகளை ஏமாற்றுவது மத்திய அரசு தானே தவிர மாநில அரசு கிடையாது. விவசாயக் கடன் மட்டுமின்றி  கர்நாடகாவின் வளர்ச்சிக்–்காக மாநில அரசு மேற்கொண்டுள்ள பணிகளை   ஒப்புக்கொள்ளும் தைரியம் மத்திய அரசுக்கு இல்லை. இதனால், விவசாயிகளின்  நலனில் அக்கறை காட்டுவதை போல் பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka ,Coomaraswamy , Farmers debt , Karnataka government ,allocated, Coomaraswamy
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...