×

புதுகை மாவட்டத்தில் ஓட்டுக்கு ரூ.2000 கொடுக்கும் அதிமுகவினர்: தினமும் கவர்களில் சிக்கும் கட்டுக்கட்டாக பணம்; மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பரபரப்பு புகார்

கறம்பக்குடி: புதுக்கோட்டை ஓட்டுக்கு ரூ.2000 என அதிமுகவினர் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் கவர்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டிய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மீது எதிர்கட்சிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். கறம்பக்குடி அருகே நார்த்தாமலையில் வீடு வீடாக பணப்பாட்டுவாடா செய்த அதிமுகவினர் பறக்கும்படையை கண்டதும் பணக்கவர்களை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் சிதறவிட்டு சென்ற ரூ.41 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடிவருகின்றனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. தேர்தல் பிரசாரம் 2 நாளில் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். பல இடங்களில் பணம் கொண்டு செல்லும் வழியில் பறக்கும்படையினர் அதிமுகவினரை கோடிக்கணக்கில் பணத்துடன் பிடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் பட்டுவாடா ஜோராக நடந்து வருகிறது. விராலிமலை, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை என அனைத்து தொகுதிகளிலும் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஆலங்குடி அருகே உள்ள ராசியமங்கலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி சக்தி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, அதிமுக மாவட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கருப்பையாவின் காரில் கருக்காகுறிச்சி பிரேம் என்பவர் ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு கறம்பக்குடி அருகே ஜெ.பேரவை ஒன்றிய செயலாளரும், பந்துவக்கோட்டை தொடக்க கூட்டுறவு சங்க தலைவருமான சுலைமான் காரில் கவர்களில் போட்டு வைக்கப்பட்டிருந்த ரூ.52000 பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று நள்ளிரவு கறம்பக்குடி அருகே குளத்தூர் தாலுகா நார்த்தாமலை சோதனை சாவடி அருகே உள்ள பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படைக்கு தகவல் வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அங்கு சென்றபோது அப்பகுதியில் அதிமுக கரை வேட்டி கட்டி நின்ற சிலர் வாக்காளர்களுக்கு கவர்களில் பணம் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பணக்கவர்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அதிமுகவினர் சிதறவிட்டு சென்ற ரூ.500, ரூ.2000 நோட்டு கவர்களில் இருந்த ரூ.41 ஆயிரத்தை கைப்பற்றிய பறக்கும்படையினர் அதை கந்தர்வகோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரனிடம் ஒப்படைத்தனர்.தேர்தல் அலுவலர் பரிந்துரையில் பேரில் பறக்கும்படையினர் இதுதொடர்பாக கீரனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நார்த்தாமலை பகுதி அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்து பணம் பட்டுவாடா செய்தவர்களை தேடிவருகின்றனர்.இதேபோல், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதன்கோன்விடுதி நால்ரோடு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்ற நகை வியாபாரி காரில் வந்தபோது அவரை தடுத்தி நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது காரில் இருந்த 7 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அவர் நகை வியாபாரி என்றும் கந்தர்வகோட்டை நகை கடைக்கு எடுத்து செல்வதாகவும் கூறினார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவை வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்டதா என்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுகை மாவட்ட அமைச்சர் உறவினர் வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் நடத்திய சோதனையில் ₹50 லட்சம், கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் சொத்து ஆவணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யபப்ட்டது. மேலும், விராலிமலை பகுதியில் பல இடங்களில் லட்டில் …

The post புதுகை மாவட்டத்தில் ஓட்டுக்கு ரூ.2000 கொடுக்கும் அதிமுகவினர்: தினமும் கவர்களில் சிக்கும் கட்டுக்கட்டாக பணம்; மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Pudukhai district ,District Election Officer ,Karambakudi ,Pudukottai election ,Puducherry ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி