×

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகள் நீர் எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து குடிநீருக்காக மட்டும் நீர் எடுக்க வேண்டும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
வைகுண்டம் அணைக்கட்டில் இருந்து அப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் திமுக வழக்கறிஞர் ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அதில்,”தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர் வைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து 20எம்.ஜி.டி.திட்டத்தின் மூலமாக 21தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9கோடியே 20லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், விதிமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து குடிதீர் தவிர வேறு எதற்கும் தண்ணீர் எடுக்கக்கூடாது என தடை விதித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,”ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கவேண்டும். மேலும் இந்த விவகாரத்தில்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுடன் அரசு அனல் மின் நிலையத்திற்கும் நீர் வழங்கலாம் என ஒரு மாறுதல் செய்யப்படுகிறது. இதைத்தவிர வைகுண்டம் அணையிலிருந்து மற்ற எந்த தொழிற்சாலைகளும் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வரும் 21ம் தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என பிறப்பித்துள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Factories ,Srivilliputhu ,The Supreme Court , Srivaikuntam Dam, Factories and Supreme Court
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...