×

மீன் வியாபாரியை தாக்கிய எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ.,க்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சென்னை: தண்டையார்பேட்டை, பல்லவன் நகரை சேர்ந்த திவாகர் (26). என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
நான், காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறேன். காசிமேடு துறைமுகத்தில் பெரியநாயகி என்ற பெயரில் இயங்கும் விசைப்படகு உரிமையாளர் அய்யனார் என்பவரிடம், தொழில் சம்மந்தமான பொருட்களை கேட்டு,  ₹50 ஆயிரம்  கொடுத்தேன். ஆனால், அவர் பொருள் தரவில்லை.கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அய்யனார் மீன்படி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம்சன் என்னை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்தார்.

அங்கு, சிறப்பு உதவி ஆய்வாளர் அக்பர், உதவி ஆய்வாளர் ராஜவேல் ஆகியோர் என்னை சரமாரியாக தாக்கினார். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், தற்போது  வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே என்னை கடுமையாக தாக்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ெஜயச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் அக்பர் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜவேல் ஆகிய இருவருக்கும் ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அரசு 4 வாரத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கி இருவருடைய சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று  உத்தரவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fines, fisherman, attack
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...