×

ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிற எழுச்சி மக்கள் மத்தியில் உள்ளது: ஆதிதமிழர் பேரவைத் தலைவர் அதியமான்

திமுக கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் நான் அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறேன். தினமும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறேன். மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி உள்ளது. மாற்றம் வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் திமுக ஆட்சி அமைவது தெளிவாக தெரிகிறது. அவினாசி தொகுதியில் சபாநாயகர் தனபால் செயல்பாடு எப்படி?அவினாசி சட்டமன்ற தொகுதியில் 20 ஆண்டுகளாக அதிமுக தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த தொகுதிக்கு யாரும் எதுவும் செய்யவில்லை. மக்களிடம் தான் பயங்கரமான வெறுப்பு உள்ளது. அது தான் ஓட்டாக மாறும். தற்போது எம்எல்ஏவாக உள்ள சபாநாயகர் தனபால் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது மீண்டும் அவினாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் தனபாலை பல இடங்களில் கிராமங்களுக்குள் வர வேண்டாம் என்று மக்கள் தடுக்கின்றனர். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதற்கு காரணம் என்ன?அதிமுக அரசிடம் மக்கள் நல திட்டங்கள் எதுவுமே இல்லை. திட்டங்கள் இருந்தால் தான் அவர்கள் செய்வார்கள். இந்த பகுதியில் திமுக ஆட்சி காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு பட்டா கொடுத்தனர். அதிமுக ஆட்சியில்  20 வருடங்களாக அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இது தான் தற்போது பெரிய எதிர்ப்பாக மாறி விட்டது. அதனால், தான் இயல்பாகவே மாற்றத்துக்கான தேவையை மக்கள் உணருகின்றனர். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எல்லாம் கிடையாது. கடந்த 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் அந்த கோட்டை எல்லாம் உடைந்து போய் விட்டது. இந்த முறை அந்த கோட்டை முழுவதும் தகர்ந்து விடும். மக்களின் எழுச்சி அந்த மாதிரி இருக்கிறது. வாக்காளர்களிடம் பணத்தை கொடுத்து அதிமுக வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணுகின்றனரே?அதிமுக பணத்தை கொடுத்து எல்லாம் வெற்றி பெற முடியாது. அதிமுக பணத்தை வாரி இறைத்தாலும், மக்கள் பணத்தை வாங்கி கொள்வார்கள். ஆனால், அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள். எனவே, பணத்தை வைத்து ஜெயிப்போம் என்பது எல்லாம் சாத்தியம் இல்லை. ஆனால், அவர்கள் செலவு செய்வார்கள் அது ெதரிகிறது. பணம் முன்பை விட அதிகமாக கொடுப்பார்கள். அது எல்லாமே தெரிகிறது. அதனால் மக்கள் மாறி விட மாட்டார்கள். அது மக்கள் உடைய பணம் தான். அது மக்களுக்கே போய் சேரட்டும்.முதல்வர் எடப்பாடி தன்னை விவசாயி என்று கூறுகிறார். ஆனால், அவரிடம் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என்று கூறுகின்றனரே?முதல்வர் எடப்பாடி தன்னை விவசாயி என்று சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை. உண்மையான விவசாயியாக இருந்திருந்தால் வேளாண் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து இருக்க வேண்டும். அதையெல்லாம் அவர் செய்யவில்லை. அது தவிர விவசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டம், உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டங்கள் எல்லாம் கொண்டு வருவதால், முதல்வர் எடப்பாடிக்கு எதிராக மக்கள் உள்ளனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆளும் அரசுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார் வருகிறதே?ஆளும் அரசுக்கு ஆதரவாக போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் செயல்படுவதாக புகார் வருவது வழக்கம் தான். 100 அதிகாரிகளில் 10 அதிகாரிகள் தான் இப்படி இருப்பார்கள். 10 அதிகாரிகள் செய்வது வெளிப்படையாக தெரியும். அவர்களால் ஒரு பெரிய மாற்றத்தை செய்து விட முடியாது. அதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே?முதல்வர் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் செய்வார்கள். மக்கள் நல திட்டங்களே அவர்களது அஜெண்டாவில் இல்லை. அதனால், மக்கள் எதிர்க்கிறார்கள். கலைஞர் ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், முதல்வர் எடப்பாடி பொறுப்பேற்ற 4 வருடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான திட்டங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. எல்லாமே இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி அந்தெந்த நேரத்திற்கான திட்டங்கள் தான் அவர்களிடம் இருந்தது. மக்களுக்கு அது தெரிந்து போய் விட்டது அதனால், அவர்கள் எதிர்க்கின்றனர். அதிமுக-பாஜ கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?அதிமுக-பாஜ கூட்டணி என்பது அதிமுகவை இந்த தேர்தலில் முற்றிலும் ஒழிப்பதற்கு பாஜ முயற்சி செய்யும். அதிமுகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜவிற்கு போடும் ஓட்டாக தான் கருத முடியும். அதிமுக என்ற ஒரு கட்சியே இப்போது இல்லை. அதிமுக கட்சி முடக்கப்பட்டு பாஜவின் கட்டுபாட்டிற்குள் வந்து விட்டது. அது உண்மை தான். தமிழகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் படத்தை எல்லாம் போட்டால் ஓட்டு வாங்கவே முடியாது. அதனால், பாஜவினர் கூட அவர்களது படத்தை தவிர்க்கின்றனர். அது உண்மையும் கூட. அவர்கள் தவிர்ப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. …

The post ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிற எழுச்சி மக்கள் மத்தியில் உள்ளது: ஆதிதமிழர் பேரவைத் தலைவர் அதியமான் appeared first on Dinakaran.

Tags : Adityamizhar Assembly ,President ,Adiyaman ,DMK alliance ,DMK ,
× RELATED ஆழ்துளை கிணறுக்கு மின்மோட்டார்...