×

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெருந்தேர் விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றம்

குமரி: பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெருந்தேர் விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெருந்தேர் விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. 12-ந்தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு நினைத்ததை முடிக்கும் விநாயகருக்கும், ஸ்ரீ பூதநாதருக்கும், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை 7.45 முதல் 8.45 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து அன்னதானமும், மாலை 6 மணிக்கு மங்கள இசையும், 7 மணிக்கு பக்திமெல்லிசை விருந்தும், இரவு 9 மணிக்கு சுவாமியும் அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறும். விழா நாட்களில் தினமும் பூஜையும், சுவாமி வாகனம் உலாவருதல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 9-ம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேர்களில் ஸ்ரீவிநாயகரையும், சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு, 6 மணிக்கு திருப்பணி மன்றத்தாரின் நன்றி அறிவிப்பு, இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசை விருந்து, 9 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சப்தா வர்ணம் நடைபெறும். 10-ம் திருவிழாவான திங்கள் கிழமை காலை 10 மணிக்கு சுவாமிக்கும் அம் பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 6 மணிக்கு ஆறாட்டு வைபோக மும் இரவு 7 மணிக்கு சமூக நாடகமும், இரவு 10 மணிக்கு தெப்போற்சவமும் நடை பெறும். இரவு 12 மணிக்கு ஸ்ரீ ஆங்கார வல்லி சப்தா வர்ணம் நடைபெறும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பணி மன்ற தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் பாண்டியன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர்கள் வேலப்பன், சண்முகம், கவுரவ தலைவர் அருணாசலம் பிள்ளை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Bhoothapandi Swamy Sivakami Ambal Temple , 12th day,great festival,Bhoothapandi Swamy,Sivakami Ambal,Temple
× RELATED ஊட்டச்சத்து மாத விழா