×

தமிழக அரசு பேருந்துகளை பம்பை வரை இயக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டிடங்கள், நடை பந்தல் ஆகியன வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பம்பை ஆற்றில் பாலங்கள் மூழ்கின. இதனையடுத்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த அக்., 16ம் தேதி திறக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வாகன நெருக்கடியை தவிர்க்க பக்தர்களின் தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டது.

அதன்படி நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் மூலம் பம்பைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இதனிடையே செப்., 28ம் தேதி சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து மாதாந்திர பூஜைக்காக அக்., மாதம் நடை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு நடை திறக்கப்பட்ட நிலையில், பெண்களை அனுமதிக்க கூடாது என சபரிமலையில் பக்தர்களும், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

மேலும் சபரிமலைக்கு வருகை தந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதால் அரசு, தனியார் பேருந்துகள், பக்தர்களின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிலக்கல் வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் பம்பை செல்ல கேரள அரசு பேருந்துகள் மற்றும் விஐபி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. டிச., மாதம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட போதும் நிலக்கல் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு பேருந்துகள் நிலக்கல் வரை மட்டுமே செல்ல அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பேருந்துகளை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala High Court ,state government ,Pampa , Tamil Nadu government buses,Pampa,nilakkal Sabarimala,Kerala High Court
× RELATED மலையாள நடிகை பலாத்கார வழக்கு; முக்கிய...