×

உலக வங்கியின் தலைவரான ஜிம் யாங் கிம் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா

வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வரும் ஜிம் யாங் கிம் (Jim Yong Kim) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பரிந்துரை செய்யப்பட்ட ஜிம்மின் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு முடிவடைந்தது.

ஆனால், அப்பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், இரண்டாவது முறையாக ஜிம் யாங் கிம் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டு அவரே பொறுப்பில் நீடித்து வந்தார். ஜிம்மின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், முன்கூட்டியே பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தென்கொரியா நாட்டில் பிறந்த அமெரிக்கரான ஜிம் பதவி விலகுவதை அடுத்து, தற்போது உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா (Kristalina Georgieva), வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்குக்கும் வரை தற்காலிகமாக தலைவர் பொறுப்பையும் கவனிப்பார் என உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jim Yang Kim ,World Bank , Chairman,World Bank,Jim Yang Kim,resigned,post
× RELATED இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி பெறும்: உலக வங்கி