×

வேளச்சேரியில் கூடுதல் துணை மின் நிலையம்: அமைச்சர் தங்கமணி பேச்சு

சென்னை: வேளச்சேரியில் புதிய துணை மின்நிலையத்திற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி தொகுதி வாகை சந்திர சேகர் (திமுக) துணை கேள்வி எழுப்பி பேசினார். அப்போது, அவர், வேளச்சேரியில் குறுகலான சாலைகள் அதிகமாக உள்ளன. அங்குள்ள மின் கம்பிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, மின்கம்பிகளை தரைக்கு அடியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளச்சேரியில் ஒரு துணை மின் நிலையம் தான் செயல்பட்டு வருகிறது.

எனவே, கூடுதலாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். துணை மின் நிலையம் அமைக்க மாநகராட்சிக்கு சொந்தமான இடம் அங்கு உள்ளது” என்றார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி பேசுகையில், “தமிழ்நாட்டில் 1600 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் பூமிக்கு அடியில் மின் கம்பி வடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உறுப்பினர் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து புதிய துணை மின் நிலையம் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Velachery ,Power Station ,Minister , Velaschery, Sub-station, Minister Thangamani
× RELATED சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!