×

கஜா புயலால் பாதித்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம்: சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கோரிக்கை

விதிமுறைகளை தளர்த்தி கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் ராமசாமி (காங்) கூறினார்.பேரவையில் நேற்று கவர்னர் உரை மீது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசியதாவது:  காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக்க வேண்டும். இதற்கான எல்லா தகுதிகளும் உள்ளன. காரைக்குடியில் அரசு  கலைக்கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும், காரைக்குடி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இல்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர்: மாவட்ட மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் தந்தோம். எம்.ஆர்.ஐ ஸ்கேன் தரப்படும். அந்த மருத்துவமனையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமசாமி: எங்கள் பகுதியில் உள்ள தமிழ்நாடு கெமிக்கல்ஸ் ஆலை கழிவுநீரால் நிலம் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் பரவுகிறது.
அமைச்சர் பாஸ்கரன்: அந்த ஆலையின் கழிவுநீர் குறித்து ஆய்வு செய்து கழிவுநீர் வெளியேறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கருப்பணன்: அந்த ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு என் றால் நடவடிக்கை எடுப்போம். பாதிப்பு என்று கூறினால் நான் நேரில் ஆய்வு  செய்ய தயாராக இருக்கிறேன்.
ராமசாமி: ஆய்வு செய்தது உண்மை. ஆனால் முடிவு வெளியிடப்படவில்லை. அந்த ஆலையை மூட வேண்டும் என்பதுதான் விவசாயிகள் கோரிக்கை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: குறைகளை தீர்க்கலாம் என்று அமைச்சர் கூறுகிறார். ஆலையை மூட வேண்டும் என உறுப்பினர் கூறுகிறார். ஆலைகள் வந்தால்தான் வேலைவாய்ப்புபெருகும்.
ராமசாமி: முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளு க்கு இழப்பீடு முழுமையாக வழங்க வேண்டும்.
அமைச்சர் துரைக்கண்ணு: ஒரு ஹெக்டேருக்கு 175 மரம் என்ற அடிப்படையில் கணக் கெடுப்பு நடத்தி வருகிறோம்.
அமைச்சர் உதயகுமார்: தேசிய பேரிடர் விதிமுறைகளை தளர்த்தி 4 ஹெக்டேர் வரை 7.75 லட்சம் வரை நிவாரணம் தர உத்தரவிட்டுள்ளோம். இதுதவிர மறுசாகுபடிக்கும் சேர்த்து 1 ெஹக்டேர் தென்னை விவசாயிக்கு 2.64 லட்சம்  கிடைக்கும்.
ராமசாமி: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண் டும். பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் ராமநாதபுரம், சிவகங்ைக, புதுக்கோட்டை மாவட்டங்களில் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
அமைச்சர் ஓ.எஸ். மணியன்: நாகை மாவட்டத்திற்கு 304 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைக்கண்ணு: பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3554 கோடி பெற்று தந்துள்ளோம். உங்கள் மாவட்டத்திற்கு 8.12 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ராமசாமி: நான் கூறிய 3 மாவட்டங்களில் யாருக்கும் தரப்படவில்லை. இதை கலெக்டரே உறுதிப்படுத்தியுள்ளார். நான் கூறியதற்கு பொறுப்பு ஏற்கிறேன்.
முதல்வர்: ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Ghazi , Relief,farmers ,Ghazi storm
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...