×

தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் பேரவையில் மசோதா தாக்கல்

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரிச்சட்டத்தில்(ஜிஎஸ்டி) திருத்தம் செய்ய சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் மாநில அரசால் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் மாநிலத்திற்குள்ளான வழங்குதலின் பேரில் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்குமான வகைமுறை  செய்வதன் பொருட்டு இயற்றப்பட்டது. புதிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறைக்கு தற்போதுள்ள வரி செலுத்துவோர்களின் எளிதான நடவடிக்கைக்காக ஒரு சில வகைமுறைகளை தமிழ்நாடு சட்டம் வழங்கியுள்ளது.  எனினும், புதிய வரி முறையானது ஒரு சில இடர்பாடுகளை சந்தித்துள்ளது. வரி செலுத்துவோர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அசவுகரியங்களில் ஒன்று.

குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவர அறிக்கையை தாக்கல் செய்தல் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டங்களின்படி வரி செலுத்துதல் ஆகும். இதுகுறித்து உத்ேதசிக்கப்பட்டுள்ள புதிய விவர  அறிக்கையை தாக்கல் செய்யும் முறையானது குறைந்தளவு தாள் பணிகளுடன் சேர்த்து சிறிய வரி செலுத்துவோர்கள், காலாண்டு முறையில் விவர அறிக்கையை தாக்கல் செய்தல்  மற்றும் வரி செலுத்துதலை எதிர்கொள்கிறது.  புதிய விவர அறிக்கையை தாக்கல் செய்யும் முறையினை நிறைவேற்றும் பொருட்டும் மற்றும் மேலே உள்ள இடர்பாடுகளை களைவதன் பொருட்டும் அரசு மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் திருத்தம் செய்ய முடிவு செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu GSD Bill , Amendmen,Tamil Nadu, GST, The bill , bill
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி