×

பத்து ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு குழந்தை பிறப்பு: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

அரிசோனா: அமெரிக்காவில் கடந்த பத்து ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஹசீண்டா ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில், ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி அன்று கோமாவில் உள்ள அப்பெண் திடீரென வேதனை கலந்த குரலில் முனகியுள்ளார். திடீரென அப்பெண்ணுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன.

இதனை கவனித்த அருகில் இருந்த செவிலியர் அளித்த தகவலையடுத்து, உடனே அப்பெண்ணை பிரசவ அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், இச்சம்பவம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. நோயாளியாகவே சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவரை யாரோ மர்மநபர் கற்பழித்து இருக்கலாம். அதன்மூலம் அவர் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து, அரிசோனா மாகாண சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும், மருத்துவமனையில் பாதுகாப்பை பலப்படுத்தவும நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Child birth ,shock incident ,America , Coma Patient, female, baby, USA
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...