×

தபால் ஓட்டுப்போட போலீசாருக்கு லஞ்சம்: அதிமுகவினர் இருவர் கைது

சென்னை: செங்கல்பட்டில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவில் அதிமுகவிற்கு வாக்களிக்க காவலர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 50க்கும் மேற்பட்ட பணம் நிரப்பிய கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட மதுராந்தகம், செய்யூர், சோழிங்கநல்லூர், திருப்போரூர், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் ஆகிய  7 சட்டமன்ற தொகுதிகளுக்கு காவலர்களுக்கான   தபால் வாக்குப்பதிவு, செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசார் மற்றும். ஊர்காவல்படையினர் என 1000க்கும் மோற்பட்டோர்  தபால்  வாக்கினை பதிவு  செய்தனர். அப்போது, அங்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரது மகன் மணிகண்டன் (26) மற்றும் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஊர்காவல்படையில் பணிபுரியும்  ரகு என்கிற ரகுராம் வயது (27 ) உள்பட 3  அதிமுக பிரமுகர்கள் கவர் மூலம் 1000  பணத்தை நிரப்பி காவலர்களை அதிமுகவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி காலை முதல் பணப்பட்டுவாடா செய்து வந்தனர். இதற்கு துணையாக ஊர்காவல் படையைச் சேர்ந்த ரகு செயல்பட்டுள்ளார் நேற்று ஒரு போலீசுக்கு பணக்கவர் கொடுத்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அதனை பிரித்து பார்த்த போலீஸ்காரர், அதில் ₹1000 பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்த உயரதிகாரியிடம் கூறியுள்ளார். இதையடுத்து,  மணிகண்டன் மற்றும் ரகுராம் இருவரையும் போலீசார் கையும் களவுமாக  பிடிபட்டனர்  மற்றொருவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர்களிடமிருந்து பணம் நிரப்பப்பட்ட 50க்கும் மேற்பட்ட கவர்களை செங்கல்பட்டு டவுன் போலீசார்  பறிமுதல் செய்தனர்.  ஏ.எஸ்.பி ஆசிஸ் பச்சோரா தலைமையில் தீவிர விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தபால் ஓட்டுபோட்ட போலீசாருக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post தபால் ஓட்டுப்போட போலீசாருக்கு லஞ்சம்: அதிமுகவினர் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bribing police ,AIADMK ,Chennai ,Chengalpattal ,Bribe ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்