×

தமிழகம் முழுவதும் வரும் 8,9 தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

விழுப்புரம்: தமிழகம் முழுவதும் வரும் 8,9 தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச மாநிலத் தலைவர் ராஜவேல் இத்தகவலை தெரிவித்துள்ளார். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொமுச உட்பட 11 சங்கங்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27,000 ஊழியர்கள் பங்கேற்க உள்ள போராட்டத்தால் தமிழகம் முழுவதிலுமுள்ள 6,000 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பின்பற்றும் கொள்கைகளினால் பலதரப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், ஊழியர்களும், அலுவலர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் என கடந்த பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனிடையே மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8,9 தேதிகளில் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்பது என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தீர்மானித்தது.

எனவே, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் கடந்த டிசம்பர் 21 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரை சந்தித்து வேலைநிறுத்த அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், துணை பொதுச் செயலாளர் கே.பி.ராமு, செயலாளர்கள் எம்.ஏ.சரவணன், எம்.சந்திரன், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கேகவன் உட்பட சென்னை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன்படி வரும் 8,9 தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக டாஸ்மாக் ஊழியர்கள் இன்று உறுதிபட அறிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike ,Taskmakers ,Tamil Nadu , Taskmakers, strike, January 8,9
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...