பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து நீர்வரத்து இருக்கும். இயற்கை சூழலில் அமைந்துள்ள அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தண்ணீர் சீராக விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வருவோர் ஓடைகளில் குளித்து மகிழ்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
