×

கடந்த அக்டோபரில் ஒருகோடி புதிய வாடிக்கையாளர்களை இணைத்தது ரிலையன்ஸ் ஜியோ: டிராய் தகவல்

டெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகளவு புதிய வாடிக்கையாளர்களை  இணைத்துள்ளனர். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை  ஆணையமான டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒருகோடி புதிய  வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3 லட்சத்து 66 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளதாவும், அதேபோன்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான  வோடாபோன், ஐடியா நிறுவனம் தங்களது 73 லட்சத்து 61 வாடிகையாளர்களை இழந்து அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனமாக உள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது 18  லட்சத்து 64 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. டாடா டெலிசர்விசஸ் 9 லட்சத்து 25 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதத்தில் நூற்று 19 கோடியை 14 லட்சம் தொலைபேசி வாடிக்கையாளர்கள் இருந்ததாகவும், அதில் மொபைல்  போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நூற்று 17 கோடி என்றும் லண்ட் லைன் இணைப்புகள் எண்ணிக்கை 2 கோடியை 20 லட்சம் என்றும் டிராய்  தெரிவித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Reliance ,customers , October, Customers, Reliance Geo, Trai
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...