×

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை : தயாரிக்கும் பணி துவங்கியது

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்த ஒரு லட்சத்து 8 வடைமாலை தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், வரும் 5ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்படுகிறது. இதற்காக வடை தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பட்டாச்சாரியர்கள் கூறியதாவது: 2,250 கிலோ வடை மாவு, 650 லிட்டர் ஆயில், 35 கிலோ சீரகம், 35 கிலோ மிளகு, 35 கிலோ உப்பு ஆகியவற்றை பயன்படுத்தி ஆஞ்சநேயருக்கு சாத்த வடை தயாரிக்கப்படுகிறது. ஒரு லட்சத்துக்கு 8 வடைகள் தயாரிக்கும் பணி நாளை (4ம் தேதி) முடிவடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் இந்த ஒரு லட்சத்து 8 வடை மாலை, மதியத்துக்கு மேல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ananam Jayanthiai ,Namakkal Anjaneyar , Hanuman Jayanti, Namakkal, Anjaneya, Vadai evening
× RELATED ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்