×

இலங்கையில் இந்தாண்டு மாகாண சபை தேர்தல்: அமைச்சரவையில் முடிவு

கொழும்பு: இலங்கையில் தொகுதி மறுஆய்வு குழுவின் அறிக்கை கடந்த 2018ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கு எதிராக கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த ஐநா மனித உரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கையில் மாகாண சபை தேர்தலை நடத்தும்படி இந்தியாவும், ஐநா மனித உரிமை ஆணையமும் வலியுறுத்தின.  இந்நிலையில், இலங்கை அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், மாகாண சபை தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து இலங்கை நில அபிவிருத்தி துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனா அளித்த பேட்டியில், “அமைச்சரவை கூட்டத்தில் 9 மாகாண சபை தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தாண்டு இறுதிக்குள் இத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்….

The post இலங்கையில் இந்தாண்டு மாகாண சபை தேர்தல்: அமைச்சரவையில் முடிவு appeared first on Dinakaran.

Tags : India ,Provincial Assembly Elections ,Sri Lanka ,Colombo ,Block Review Committee ,Hindi Provincial Assembly Election ,Dinakaran ,
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு