×

ரூ.14 கோடிக்கு ரூ.70 லட்சம் ஒதுக்கிய விவகாரம் வள்ளுவர் கோட்டத்தில் நாளை பொறியாளர்கள் குழு ஆய்வு

சென்னை:  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு, பெரிய அரங்கம், பின்பகுதியில் திருவாரூர் தேரை நினைவுப்படுத்தும்  வகையில் சிற்ப தேர் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் தேரில் உள்ள சிற்பங்கள் தூசி படிந்து தெளிவாக  தெரியவில்லை. இங்குள்ள சிலைகளும் சிதிலமடைந்துள்ளது. மேலும், சுற்றுச்சுவர் வண்ணம் பூசி பல ஆண்டுகள் ஆவதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது. உட்பகுதியில் உள்ள பிரமாண்ட அரங்கத்தை  சுற்றியுள்ள பகுதிகள் பொலிவிழந்து பழங்கால அரண்மனை போன்று மாறி வருகிறது. தேரில் பிரமாண்டமாக தொங்கி கொண்டிருந்த தேர் சீலைகள் கிழிந்துள்ளன.எனவே, இலக்கிய நினைவு சின்னமான வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில், வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணிக்கு ₹14  கோடி தமிழக அரசிடம் நிதி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசு ₹70 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, புனரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், இந்த நிதியை கொண்டு வள்ளுவர் கோட்டத்தில் முழுமையாக புனரமைப்பு பணி மேற்கொள்ள  முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் டிசம்பர் 23ம் தேதி செய்தி வெளியானது.இதையடுத்து வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ஆகும் செலவு குறித்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் மனோகரன் தலைமையிலான குழுவினர் நாளை  நேரில் ஆய்வு செய்கின்றனர்.இதை தொடர்ந்து, அந்த ஆய்வின் பேரில் தயாரிக்கப்படும் அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர்.அதன்பிறகு தமிழக அரசு சார்பில் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க கூடுதல்  நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Valluvar Division , issue,allocation, Rs 70 crore to Rs 14,analyzed tomorrow ,e Valluvar Division
× RELATED கைது செய்து அலைக்கழிப்பு; மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு