×

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:  மீனவர்களுக்கு எதிராக சிங்கள அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக  மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை  திருப்பி தர இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், கண்டிப்பாக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது  கட்டாயமாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ₹1.50 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது. அதன்படி தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ₹60  லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அரசின் இந்த அத்துமீறல்கள் எதையும் இந்தியா கண்டிக்காததுதான் இலங்கைக்கு அதீத துணிச்சலை தந்துள்ளது.
.
இலங்கைப் படையினரின் அத்துமீறல்கள் இதேபோல் தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும். இலங்கையின் அத்துமீறலுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட  வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.  கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக  மீனவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,Katchatheevu ,Ramadoss ,area , Government,safety , fishing fishermen,Katchatheevu area:,Ramadoss's assertion
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...