×

வங்காளதேச பொதுத்தேர்தலில் அவாமி லீக் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி: மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

டாக்கா: வங்காளதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 281 இடங்களை கைப்பற்றி அவாமி லீக் கட்சி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. வங்காளதேசத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. வங்காளதேசத்தை பொறுத்தவரை பெரும்பான்மை இடங்களை பெற 151 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் 281 இடங்களை அவாமி லீக் கட்சி கைப்பற்றியது. மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா ஆட்சி அமைக்கவிருக்கிறார். இதனிடையே இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தலில் கள்ள ஓட்டு பெற்று, முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். எதிர்கட்சி மொத்தமாக ஏழு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறை மற்றும் மோதலில் 17 பேர் பலியாகியுள்ளனர். வன்முறைகள் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள தேசிய கட்சி தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனால் தேர்தலின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150-க்கும் அதிகமான இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Awami League ,election ,Bangladesh ,Sheikh Hasina , Awami League wins,majority,Bangladesh election,Sheikh Hasina
× RELATED கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’...