×

எம்பி தேர்தலில் பாஜ யாருடன் கூட்டணி? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

சென்னை : எங்களுடன் சமஉணர்வோடு கூட யார்  வருகிறார்களோ, அவர்களோடு நாங்கள் கூட்டணி அமைப்போம் என்று மத்திய அமைச்சர்   பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னையில் இருந்து நேற்று காலை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் விமானநிலையத்தில் அளித்த பேட்டி: கடந்த 2014-ம் ஆண்டு பாஜ இருந்த நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் தற்போது பாஜ என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதையொட்டித்தான் தேர்தல் முடிவுகளும் அமையும் என்ற ஒரு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியோடுதான் சந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அனைத்து கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன.

பாஜவும் அதேபோல் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில்தான் இருக்கிறோம். ஆனால், அதே நேரம் எந்தவொரு கட்சியுடனும் ஒட்டி போக வேண்டும் என்ற ஏக்கத்தில் பாஜ இல்லை. எங்களுடன் சமஉணர்வோடு கூட யார் வருகிறார்களோ, அவர்களோடு நாங்கள் கூட்டணி அமைப்போம். பாஜ தலைமையில் கூட்டணி அமையுமா அல்லது வேறொரு கட்சியோடு பாஜ கூட்டணி வைக்குமா என்பது பற்றி நான் இப்போது கருத்து கூற விரும்பவில்லை.முத்தலாக் விவகாரத்தில் அதிமுக எம்பி அன்வர்ராஜா எந்த நோக்கத்தில் அவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை.

மேலும் அவர் பாஜ ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது என்றெல்லாம் பேசினார். அது தவறான பேச்சு. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது அதனால் நாட்டு மக்களுக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டது உண்மைதான். அதை பாஜவே ஏற்றுக்கொண்டது. ஆனால் தற்போது அந்த பிரச்னைகள் நீங்கி பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களும் நல்ல முறையில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,BJP ,MP election ,Ponnarathakrishnan , BJP,MP,elections,alliance,whom,Pon.Rathakrishnan,answered
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...