×

ஹெலிகாப்டர் வழக்கில் சோனியாவை இழுக்க இடைத்தரகர் மைக்கேலை மத்திய அரசு தூண்டுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி:  அகஸ்டாவெஸ்ட்ேலண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில்  இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நேற்று முன்தினம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத் துறை, சோனியா காந்திக்கு இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறியது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில், ‘‘மோடி அரசை அமலாக்கத் துறை தற்போது பாதுகாத்துள்ளது. தேர்தலில் பாஜ தோல்வியடையும்போது நாங்கள்  அகஸ்டாவெஸ்ட்லேண்ட் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் சதி குறித்து விசாரணை நடத்துவோம். இந்த வழக்கில் தரகர் மைக்கேலை சோனியாவுக்கு எதிராக தவறான தகவல் வழங்கும்படி மத்திய அரசு  அழுத்தம் ெகாடுத்துள்ளது. இந்த ஊழலில்  மத்திய அரசு செய்த சதியை மறைத்துள்ளது. எனவே, காவலாளி  மீது கறைபட்டுள்ளது தற்போது தெளிவாக தெரிகிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Sonia ,Congress , Sonia , helicopter case,Congress, accusation
× RELATED காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு