×

மெல்போர்னை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணி 33 ரன் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியை வீழ்த்தியது.டாக்லேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ரெனகேட்ஸ் முதலில் பந்துவீசியது. சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் குவித்தது. ஜோர்டன் சில்க் 30, டாம் கரன் 23*, கேப்டன்  ஹென்ரிக்ஸ், பிலிப் தலா 20 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து 33 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க வீரர் ஹார்வி 30, கேப்டன் கூப்பர், பாய்ஸ் தலா 13, லூட்மேன் 10 ரன் எடுக்க,  மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். சிக்சர்ஸ் பந்துவீச்சில் டாம் கரன் 3, அபாட், ஓ கீப், பெஞ்சமின் மேனன்டி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிக்சர்ஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sydney Sixers ,Melbourne , Sydney Sixers, dropped ,elbourne
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை