×

டிடிஆர் அலட்சியத்தால் குழந்தை பலி

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம், கண்ணூர் அருகே உள்ள இரிக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஷமீர். இவரது  மனைவி சுமையா. இவர்களின் குழந்தை மரியம். இக்குழந்தைக்கு இருதய  பிரச்னை காரணமாக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை  செய்யப்பட்டு வீட்டில் வைத்து கவனித்து வந்தனர்.  நேற்று முன்தினம் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதன்படி 2 நாட்களுக்கு முன் இரவு கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில்  ஏறினர். கடைசி நேரத்தில் முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை. சாதாரண  பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் குழந்தையுடன் முன்பதிவு  பெட்டியில் ஏறினர். அந்த பெட்டியில் இருக்கை இல்லை என டிக்கெட் பரிசோதகர்  கூறினார். இதனால் அவர்கள் குழந்தையுடன் ஒவ்வொரு பெட்டியாக சென்றனர். எந்த  பெட்டியிலும் இருக்கை கிடைக்கவில்லை. நள்ளிரவில் குற்றிகுளம்  பகுதியில் செல்லும்போது குழந்தை உடல்நிலை மோசமானதால், ரயிலை நிறுத்தி அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இருதய நோயால்  குழந்ைத ஆபத்தான நிலையில் இருக்கிறது என கூறியும் டிடிஆர் சீட்  ஒதுக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DDR , Child killed , DDR negligence
× RELATED புறநகர் ரயிலின் வீடியோ வைரல்; 2...