×

லிப் சர்வீஸ் மட்டுமே செய்பவர் கமல் என வானதி சர்ச்சைப் பேச்சு : யாகாவாராயினும் நாகாப்போம் என கமல் பதிலடி!!

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய ஸ்மிருதி, மக்களுடைய பிரச்சினைகள்  தொடர்பாக வானதி சீனிவாசனுடன் சக போட்டியாளரான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விவாதம் செய்ய தயாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் மோடியுடன் முதலில் சந்திப்புக்கு ஸ்மிருதி இரானி ஏற்பாடு செய்யட்டும்.அதன்பின் வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் கடுப்பான வானதி சீனிவாசன், கஷ்டப்பட்டு முன்னேறி பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதானா? என கேள்வி எழுப்பியதோடு இவர்களா பெண்களை காப்பாற்றப்போகிறார்கள் என காட்டமாக கேட்டிருந்தார்.இதற்கு கமல் தரப்பிலோ, மநீம தரப்பிலோ எந்த விளக்கமும் இதுவரை தரப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் கமலை வானதி கடுமையாக விமர்சித்துள்ளார். என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்கிறார்களே, அந்த நடிகரிடம்(கமல்) நான் கேட்கிறேன்., இத்தனை நாள் உதட்டுச் சேவை மட்டும்தானே செய்தீர்கள்?அதாவது ஒன்று உதட்டளவில் சேவை செய்வதுஞ்இன்னொன்று உதட்டுக்கு சேவை செய்வது.. இதனை செய்துவிட்டு என்னை துக்கடா என விமர்சிக்கலாமா? என பதிலடி கொடுத்துள்ளார்.

வானதியின் சர்ச்சை பேச்சால் கடுப்பாகிய கமல்ஹாசன் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட்டில், “வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்….

The post லிப் சர்வீஸ் மட்டுமே செய்பவர் கமல் என வானதி சர்ச்சைப் பேச்சு : யாகாவாராயினும் நாகாப்போம் என கமல் பதிலடி!! appeared first on Dinakaran.

Tags : Vanadi ,Kamal ,Yagavaraiinum ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly elections ,Vanati ,Yakavaraiinum ,
× RELATED சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர்...