×

சேவை வரி கட்டாத தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு 2 வங்கி கணக்கு முடக்கம்: ஹைதராபாத் ஜிஎஸ்டி ஆணையரகம் நடவடிக்கை

ஹைதராபாத்: சேவை வரி கட்டாத தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 2 வங்கி கணக்குகளை ஹைதராபாத் ஆணையரகம் முடக்கி வைத்துள்ளது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு (43). அவரது வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹைதராபாத் ஜிஎஸ்டி ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் மகேஷ்பாபு 2007-08ம் ஆண்டில் சினிமா, விளம்பரம் போன்றவற்றில் நடித்து வந்த பணத்திற்காக சேவை வரியாக ரூ.18.50 லட்சம் செலுத்த வேண்டும்.

இது குறித்து ஜிஎஸ்டி சீனியர் அதிகாரிகள் எவ்வளவே முயன்றும் மகேஷ்பாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரது ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வரி மற்றும் அபராதம், வட்டி என்கிற வகையில் மகேஷ்பாபு ரூ.73.50 லட்சம் செலுத்த வேண்டும். அந்த வகையில் ஆக்சிஸ் வங்கியில் இருந்த 42 லட்சத்தை பெற்றுள்ளோம். ஐசிஐசியில் இருந்து இன்று மீதி பணத்தை வாங்குவோம். வங்கி பணம் தர மறுத்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mahesh Babu ,Hyderabad GST Commissioner , Telugu Actor,Mahesh Babu, 2 bank account ,freezes, Hyderabad GST Commissioner
× RELATED சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மகேஷ் பாபு சந்திப்பு