×

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படுவதில் முறைகேடு: கட்டுநர், வல்லுநர் சங்கத்தினர் குற்றச்சாட்டு

சென்னை: அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் டெண்டர் கோரப்படுவதில் முறைகேடுகள் அரங்கேறுவதாக அகில இந்திய கட்டுநர், வல்லுநர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் அய்யநாதன் ஆன்லைன் டெண்டர் விண்ணப்பம் வாங்கிக்கொண்டு அதற்கான ஆவணங்களை நேரில் பெறுவதாக கூறியுள்ளார். இதன்மூலம் ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கான பதிவு ஆன்லைனில் இல்லாமல் செய்யப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டாகும்.

இதேபோல் பேக்கேஜ் டெண்டர் என்று கூறி ஒரு நபரிடம் ஒட்டுமொத்த பணிகளையும் ஒப்படைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக கட்டுனர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அரசு பதிவுபெற்ற பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரசு ஒப்பந்தங்கள் விடுவதில் ஒளிவுமறைவற்ற நடவடிக்கை இருக்க வேண்டும் என்று கட்டுனர், வல்லுநர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக இ-டெண்டர் முறையில் உள்ள குளறுபடிகளை களைவது அவசியம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tender leakage ,Officer ,Professional Association Accused , Tamilnadu,online Tender,Scandal,Officer,Professional Association,Accusation
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல்...