×

சபரிமலையில் 36 லட்சம் பக்தர்கள் வருகை குறைந்தது

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருடம் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 36 லட்சத்திற்கு மேல் குறைந்துள்ளது என்று திருவிதாங்கூர் ேதவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.இதுகுறித்து அவர் சபரிமலையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சபரிமலையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. கடந்த வருடம் மண்டல பூஜைக்கு 2 நாட்களுக்கு முன்பு வரை 68 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். இவ்வருடம் சுமார் 32 லட்சம் பக்தர்களே வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக கோயில் வருமானமும் குறைந்துள்ளது. கடந்த வருடம் ₹164 கோடி வருமானம் கிடைத்தது. இவ்வருடம் ₹105 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. கடந்த வருடம் உண்டியல் மூலம் ₹59 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் இவ்வருடம் ₹42 கோடி 33 லட்சம் மட்டுமே கிடைத்தது.

சபரிமலையில், இளம்பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாகவே பக்தர்களின் வருகை குறைந்தது. எல்லா வருடத்திலும் பக்தர்களின் எண்ணிக்கையை அப்போதைய தேவசம் போர்டு தலைவர்கள் மிகைப்படுத்தி கூறி வந்தனர். கடந்த வருடம் மண்டல, மகரவிளக்கு சீசனில் 5 கோடி பக்தர்கள் வந்ததாக அப்போதைய தேவசம் போர்டு தலைவர் ெசான்னார். ஆனால் ஒரு நிமிடத்தில் 100 பக்தர்களை அனுமதித்தாலும் மண்டல, மகரவிளக்கு காலங்களில் 60 நாட்களில் அதிகபட்சமாக 72 லட்சம் பக்தர்களே செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala ,arrival ,devotees , In Sabarimala, the arrival ,36 lakh ,pilgrims fell
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு