×

பம்மல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பன்றிக்காய்ச்சல்?

சென்னை: சென்னை பம்மல் சங்கர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதிமூலம். இவர் வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமாகாததால் அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  225வது வார்டில் நேற்று முன்தினம் முதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர் காய்ச்சல் ஏற்பட்டதால், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் இன்ஸ்பெக்டர் ஆதிமூலத்திற்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது தெரியவந்தது.  இதனால் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bammal , Pammal, police, Swine Flu?
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...