×

சபரிமலைக்கு சென்ற 11 சென்னை இளம்பெண்கள்: பம்பையில் தடுத்து நிறுத்தியது கேரள போலீஸ்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த 11 இளம்பெண்கள் கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு அனைத்து வயது இளம் பெண்களும் செல்ல உச்ச நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ, மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘மனிதி’ என்ற பெண்கள்  அமைப்பின் சார்பில் இளம் பெண்கள் இன்று  சபரிமலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பை சேர்ந்த இளம் பெண்கள் உட்பட 40 பெண்கள் சென்னை, மதுரை உட்பட பல இடங்களில்  இருந்து புறப்பட்டு இன்று கோட்டயம் வருவதாகவும். கோட்டயத்தில் இருந்து அனைவரும் ஒன்றாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி கேரள முதல்வர் அலுவலகத்திற்கு இ மெயில் அனுப்பியதாகவும், பாதுகாப்பு தருவதாகவும் முதல்வர் அலுவலகம் உறுதியளித்ததாகவும் மனிதி ஒருங்கிணைப்பாளர் செல்வி கூறினார்  .கடந்த சில தினங்களுக்கு முன் கேரள போலீசார் தங்களை தொடர்புக் கொண்டு பயண திட்டம் குறித்து விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார். சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ள குழுவில் 15 இளம் பெண்கள் இடம்  பெற்றுள்ளதாக கூறப்பட்டது. சென்னை, மதுரை, ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளாவைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இளம் பெண்கள் வருவதாக தகவல் வெளியானதையடுத்து  பத்தனம்திட்டா மற்றும் கோட்டயத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இளம் பெண்கள் வந்தால் தடுப்போம் என்று ஐயப்ப தர்ம சேனா, சபரிமலை கர்ம சமிதி உட்பட பல்வேறு அமைப்பினர் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த 11 இளம்பெண்களை பம்பையில் வைத்து கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பக்தர்களுடன் கேரள போலீசார்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர இளம் பெண்ணிற்கு எதிர்ப்பு: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 20 பேர்  கொண்ட குழு நேற்று முன்தினம் பஸ்சில் சபரிமலை வந்தனர். அவர்களில் 43  வயதான விஜயலட்சுமி என்ற  ஒரு பெண்ணும்  வந்திருந்தார். கோட்டயத்துக்கு நேற்று மாலை  வந்தவர்கள், காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு இளம் பெண்கள் தரிசனம்  செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் சபரிமலை சென்றால்   பிரச்னை ஏற்படும் என்று போலீசார் கூறினர். இதனால் அவருடன் வந்த மற்றவர்கள் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். விஜயலட்சுமி மட்டும் நிலக்கலில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : girls ,Chennai ,Sabarimala ,Pampa ,Kerala Police , Sabarimala, Chennai, young women, Pampai and Kerala police
× RELATED பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய...