×

கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம் மகனை கழுத்தறுத்து கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை : திருச்சி அருகே சோகம்

திருவெறும்பூர் : திருச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூங்கிக்கொண்டிருந்த  மகனை கழுத்தறுத்து கொலை செய்து தாயும் தூக்கிட்டு தற்ெகாலை செய்துகொண்டார். திருச்சி  அடுத்த குண்டூர் அருகே உள்ள அய்யம்பட்டி வள்ளாலகண்ட அய்யனார் கோயில்  தெருவில் வசித்து வருபவர் முருகன் (48). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி  கோமதி (40). இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகள், சரவணன் (14) என்ற மகன்  இருந்தனர். நந்தினி பிளஸ் 1ம்,  சரவணன் 9ம் வகுப்பும் படித்து  வந்தனர். முருகனுக்கு சொந்த ஊர் ஆவூரில் உள்ள வடக்கு புதுப்பட்டி.  இங்கு தான் வாங்கிய இடத்தில் முருகன் புது வீடு கட்ட முடிவு செய்தார். இது, கோமதிக்கு  பிடிக்கவில்லை. ஆனால் இதையும் மீறி முருகன், 4 நாட்களுக்கு முன் புதிதாக பூமி பூஜை பூட்டார். இதைக் கண்டித்து கணவருடன் கோமதி சண்டை போட்டார்.  அப்போது, கோமதியை தாக்கி விட்டு, கணவர் சென்றுவிட்டார். அன்று முதல் கோமதி  விரக்தியில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு முருகன் பணிக்கு  சென்று விட்டார். கோமதி மகன், மகளுடன் ஒரே அறையில் படுத்திருந்தார். நேற்று  அதிகாலை மகள் நந்தினி மட்டும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து  படித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் வீட்டின் உள்ளே செல்ல  முயன்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. வேகமாக தட்டியும் கதவு  திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, படுக்கையில் காயங்களுடன் சரவணன் கிடந்தார். அதே அறையில் மின் விசிறியில்  கயிற்றில் கோமதி தூக்கில் தொங்கினார்.

இதைப்பார்த்ததும் நந்தினி கதறி  அழுதார். இவரது சத்தத்தை கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து கதவை  உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த கோமதியை இறக்கினர்.  அப்போது, கோமதி இறந்துவிட்டது தெரியவந்தது. அதேபோல்,  சரவணனும் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து  கிடந்தார். அருகில், ரத்தத்துடன் கத்தி இருந்தது. இதுபற்றி நவல்பட்டு  போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின்  சடலங்களையும் மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், கணவருடன்  இருந்த கோபத்தில் தூங்கிக்கொண்டிருந்த மகனின் கழுத்தை கத்தியால் அறுத்து  கொலை செய்து விட்டு, பின்னர் கோமதியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death , Mother is dead ,suicide
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்