×

35 சார்பதிவாளர்களுக்கு பதவி உயர்வு : ஐஜி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 35 சார்பதிவாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி ஐஜி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். பதிவுத்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஏஐஜி, டிஐஜி என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் நிலை சார்பதிவாளர்களுக்கு முதல்நிலை சார்பதிவாளராக பதவி உயர்வு வழங்கி ஐஜி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். நீலாங்கரை சார்பதிவாளர் ஆறுமுக நவராஜ், படப்பை சார்பதிவாளர் தாமோதரன், செங்கல்பட்டு கண்காணிப்பாளர் கைலாஷ் நாத்,  தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம் மணிமேகலை, அம்பாசமுத்திரம் சார்பதிவாளர் ராஜா, பதிவுத்துறை தலைவர் அலுவலகம் புஷ்பலதா, அகிலா ஜோ, வேளச்சேரி சார்பதிவாளர் சரவணக்குமார், தாம்பரம் சார்பதிவாளர் வெங்கடசுப்ரமணியன், உடையார் பாளையம் சார்பதிவாளர் சிவக்குமார், திட்டக்குடி சார்பதிவாளர் கலைச்செல்வி, திருநாவலூர் சார்பதிவாளர் அன்பழகன், சாயல்குடி சார்பதிவாளர் சந்தானலட்சுமி, ஆனைமலை சார்பதிவாளர் முத்துக்கண்ணன், ஊத்தங்கரை சார்பதிவாளர் கீதா, வெளிப்பட்டினம் சார்பதிவாளர் இளங்கோவன், அறந்தாங்கி சார்பதிவாளர் சரவணன், ராயக்கோட்டை சார்பதிவாளர் சண்முகவேல், கருங்காலக்குடி சார்பதிவாளர் தாமரை செல்வி, அவலூர்பேட்டை சார்பதிவாளர் ராஜேந்திரன் சர்மா, திண்டுக்கல் வழிகாட்டி சார்பதிவாளர் சந்திரமதி உட்பட 35 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணை தேதியில் பணியில் இருந்தனரா அல்லது விடுப்பில் இருந்தனரா என்பதற்கும் விடுப்பு முடிந்து பணியில் சேரும் நாள் குறித்த விவரம் தெரிவித்திடவும், சார்பதிவாளர்களின் பணி பதிவேட்டில் உரிய குறிப்பு மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த ஆணையினை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களுக்கு சார்பு செய்யவும், ஆணை பெறப்பட்டதற்கான ஒப்புதலை சார்பதிவாளர்களிடம்  இருந்து பெற்று அனுப்பவும் சம்பந்தப்பட்ட டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Respondents , Promotion , 35 Respondents, IG Directive
× RELATED மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50%...