×

பதிவு ஆவணங்களை அன்றைய நாளிலேயே திருப்பி கொடுக்கும் திட்டம்: அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களுக்கு கூடுதல் வசதி: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் ஆன்லைன் பத்திர பதிவு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டில் இருந்த படியே இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு  விண்ணப்பிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட தேதியில் அசல் ஆவணங்களை கொண்டு வந்து பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு, பதிவு செய்யப்படும் ஆவணங்களை உடனடியாக திருப்பி தரப்படவில்லை என்று  கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பத்திரத்தை பெறுவதற்காக மற்றொரு நாட்கள் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த நிலையில் பத்திரம் பதிவுக்காக  வரும் பொதுமக்களிடம் அன்றைய நாளிலேயே பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தர வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ஒவ்வொரு அலுவலகத்திற்கு ஒரு கணினி ஒரு விரல் ரேகை  கருவி, இரண்டு வெப் கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அதிக அளவிலான பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களில் கூடுதலாக ஒரு அச்சு நகல் இயந்திரம், ஸ்கேனர் கருவி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் 2 ஸ்கேனர்கள்  கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பணிச்சுமை உள்ள அலுவலகங்களுக்கு கூடுதலாக வழங்கப்படவுள்ள புதிய ஸ்கேனர் ஒன்றினை உடன் வழங்க மாவட்ட பதிவாளர்களக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் உடனுக்குடன் ஆவணதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது போதுமான அளவு கணினி உபகரணங்கள் மூன்று வகையான இணைய இணைப்பு மற்றும் நேரடி  உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்கேன் செய்யப்பட்ட அசல் ஆவணங்களை திரும்ப பெற அங்கீகாரம் பெற்ற நபரிடம் விரல் ரேகை பெற்று உடனுக்குடன் ஒரே வருகையில் திரும்ப அளிக்க  வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐஜி அறிவுரை வழங்கியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Facilities , Registration Documents, Securities, Offices, Additional Facility, Registration IG
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...