×

மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து டூர் : மித்தாலி, ஹர்மான்பிரீத் கேப்டனாக நீடிப்பு

மும்பை: நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக மித்தாலி ராஜ் (ஒருநாள் போட்டி), ஹர்மான்பிரீத் கவுர் (டி20) நீடிக்கின்றனர். அடுத்த மாத தொடக்கத்தில் நியூசிலாந்து செல்லும் இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. உலக கோப்பை டி20 தொடரின் அரை இறுதியில் தோற்று வெளியேறிய பிறகு இந்திய அணி சந்திக்கும் முதல் தொடர் இது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் உட்பட அணி நிர்வாகம் தனக்கு எதிராக செயல்பட்டதாக மித்தாலி ராஜ் குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டபுள்யு.வி.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதும் சந்திக்கும் முதல் சவால் இது என்பதால், நியூசி. தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மித்தாலி ராஜ், டி20 அணியின் கேப்டனாக ஹர்மான்பிரீத் கவுர் நீடிக்கின்றனர். பார்மில் இல்லாத வேதா கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுமுக வீராங்கனை பிரியா பூனியா சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 24ம் தேதி நேப்பியரில் நடைபெற உள்ளது.

ஒருநாள் போட்டிக்கான அணி: மித்தாலி ராஜ் (கேப்டன்), பூனம் ராவுத், ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஹர்மான்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மோனா மேஷ்ராம், ஏக்தா பிஸ்ட், மான்சி ஜோஷி, தயாளன் ஹேமலதா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெயிக்வாட், ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே.
டி20 அணி: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மித்தாலி ராஜ், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், அனுஜா பட்டீல், தயாளன் ஹேமலதா, மான்சி ஜோஷி, ஷிகா பாண்டே, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், ஏக்தா பிஸ்ட், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பிரியா பூனியா.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women's cricket team ,Tour ,New Zealand ,Mittal ,Harmanpreet , Women's cricket team, New Zealand Tour, Mittal, Harmanpreet's captaincy extension
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...