×

2.0 படத்தில் வருவதுபோல் மரத்தில் இருந்து மடிந்து விழுந்த பறவை, அணில்கள்

கொடுமுடி: கொடுமுடி அருகே, 2.0 படத்தில் வருவதுபோல பறவைகள் கொத்து கொத்தாக மடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூரில் திங்கள்சந்தை உள்ளது. இங்குள்ள மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள், அணில்கள் வசிக்கின்றன. இந்நிலையில், நேற்று இந்த மரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான குருவி, மைனா மற்றும் அணில்கள் திடீரென மரத்தில் இருந்து உயிரிழந்து விழுந்தன.

ரஜினி நடித்து சமீபத்தில் வெளிவந்த 2.0 படத்தை போல பறவைகள் கொத்து கொத்தாக மடிந்து விழுவதாக பரவிய தகவலை ெதாடர்ந்து அப்பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு கூடினர். ஆனால், இந்த பறவைகள் எதனால் இறந்தது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சென்னசமுத்திரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஞானமூர்த்தி கூறும்போது, ‘‘திங்கள்சந்தை வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்த ஏராளமான பறவை. அணில்கள் மடிந்துள்ளன. அருகில் உள்ள வயல் வெளியில் இருந்த விஷப்பொருட்களை சாப்பிட்டு அவை இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களது விசாரணைக்கு பின்னரே முடிவு ெதரியவரும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bird, Squirrel, Bird, Squirrel
× RELATED திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய...