×

கறம்பக்குடி அருகே புயல் தாக்கி ஒரு மாதம் கடந்தும் சேதமடைந்த அரசு பள்ளி சீரமைக்கப்படவில்லை : மாணவ, மாணவிகள் அவதி

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே கஜா புயல் தாக்கி ஒரு மாதத்தை கடந்தும் சேதமடைந்த அரசு தொடக்கப்பள்ளியை சீரமைக்காததால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பெற்றோர் கவலையடைந்துள்ளனர். கடந்த மாதம் கஜா புயல் தாக்கி ஏராளமான பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. கறம்பக்குடி அருகே வாண்டான் விடுதி ஊராட்சியில் வாண்டான்விடுதி சூரியன்விடுதி, முத்தன்விடுதி, அங்கன்விடுதி, பேயாடிப்பட்டி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் பேயாடிப்பட்டி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஓட்டு கட்டிடத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வந்தன. அதில் 2 வகுப்புகள் நடைபெற்றன. தொடக்க பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியானது கடந்த 15ம் தேதி ஏற்பட்ட கஜா புயல் தாக்குதலால் பெரிதும் சேதமடைந்து ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பலத்த சேதமடைந்து காணப்படுகிறது இதன் காரணமாக அருகில் உள்ள கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தொடக்க பள்ளி ஓட்டு கட்டிடம் சேதமடைந்ததால் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மாணவ, மாணவிகள் அவதி அடைவதால் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர், பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

அரசு தொடக்க பள்ளி கட்டிடம் கஜா புயல் தாக்குதலுக்குள்ளாகி இன்று வரை அரசு நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பாக எந்தவித சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை. அப்பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு பொதுமக்களும் அரசு மீது கோபத்தில் உள்ளனர். மேலும் பளுதடைந்த தொடக்க பள்ளியின் மேல் சட்டங்கள் ஓடுகள் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு அவற்றை அகற்றி வகுப்புகள் நடைபெறுவதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school ,storm ,Karambukudi , Karambukudi, Gajah Storm, Government School
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்