×

கோட்டூர் அருகே சாலை விபத்தில் இறந்த நண்பரின் நினைவு நாளில் 3 ஆம் ஆண்டாக ரத்ததானம் வழங்கி விழிப்புணர்வு

மன்னார்குடி: கோட்டூர் அருகே சாலை விபத்தில் சிக்கி ஏராளமான ரத்தம் வெளியேறியதால் மரணமடைந்த இளைஞரின் நினைவு நாளில், அவரது நண்பர்கள் 3 ஆம் ஆண்டாக ரத்த தானம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டுரை சேர்ந்தவர் கோபால் . இவரது மகன் விக்னேஷ் (28) . பாலிடெக்னிக் முடி த்து மன்னார்குடி அருகே சேரங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி இரவு திருத்துறைப்பூண்டியில் இருந்து கோட்டூருக்கு பைக்கில் வந்த போது, நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயமநை்து சாலையோரம் மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ஏராளமான ரத்தம் வெளியேறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தேவையான ரத்தம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் அவரது நண்பர்கள் மனதில் பெரும் வேதனை அடைய செய்தது. இதையடுத்து, சாலை விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரத்தம், தானமாக வழங்குவதன் மூலம் உயிரை காப்பாற்றிட முடியும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் நண்பர் விக்னேஷ் நினைவு நாளில் அவரது நண்பர்கள் ரத்த தானம் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்படி, மூன்றாம் ஆண்டு நினைவு தினமான நேற்று விக்னேசின் நண்பர்கள் கோட்டூரில் ரத்த தானம் முகாம் நடத்தினர். இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ரவி முன்னிலையில் சுமார் 35-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.  ஆண்டுதோறும் நண்பரின் நினைவு நாளில் ரத்த தானம் செய்து, விபத்தில் உயிருக்கு போராடுபவர்களுக்கு ரத்த தானம் வழங்கிட பொதுமக்கள் முன் வர வேண்டும் என்ற நண்பர்களின் விழிப்புணர்வு நடடிக்கையை பொது மக்கள் பெரிதும் பாராட்டினர்.

Tags : Cottur ,Mannarkudi ,Kotur ,Gopal ,Thiruvarur District, Kotur ,
× RELATED பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்க...